Header Ads

RER தொடருந்து நிலையம் ஒன்றில் தீக்குளிக்க முற்பட்ட நபர்..!!

 


நபர் ஒருவர் RER தொடருந்து பயணிக்கும் நிலையம் ஒன்றில் வைத்து தீக்குளிக்க முற்பட்டுள்ளார். 

 
இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை Vigneux-sur-Seine (Essonne) தொடருந்து நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. மாலை 4.40 மணி அளவில் 35 வயதுடைய நபர் ஒருவர் தன்னைத்தானே தீயிட்டு கொழுத்தியுள்ளார். குறித்த நிலையத்தில் RER தொடருந்தில் இருந்து இறங்கியதும, முதலில் தனது மேலாடையை கழற்றி கீழே வீசி அதன் மேல் பெற்றோலை ஊற்றியுள்ளார். பின்னர் அதனை பற்றவைத்து அதனை காலால் மிதித்துள்ளார். இப்போது அவரது உடல் முழுவதும் தீ வேகமாக பர, அங்கிருந்து ஓடியுள்ளார்.  
 
இந்த கோர காட்சியினை பல பயணிகள் நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் காயமடைந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 

No comments

Powered by Blogger.