Header Ads

’சுரேஷ் ஓர் அரசியல் விபச்சாரி’



ஈபீஆர்எல்எப் அமைப்பின் தலைவரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் இணைப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் அரசியல் விபச்சாரி என, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் - கொக்குவிலில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போது, ஐ.நாவுக்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வரைபில் இனப்படுகொலை என்ற வசனத்தை உள்ளடக்கவில்லை என்றும், சர்வஜன வாக்கெடுப்பை கNஐந்திரகுமார் விரும்பவில்லை என்பது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை சுரேஷ் பிரேமச்சந்திரன் முன்வைத்திருந்தார்.

இந்நிலையில், இன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நடத்திய ஊடக சந்திப்பின் போது சுரேஷ் பிரேமச்சந்திரனின் மேற்படி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கேள்வி எழுப்பிய போது, அந்தக் குற்றச்சாட்டக்களை கஜேந்திரகுமுhர் நிராகரித்தார்.
அது மட்டுமல்லாமல் சுரேஷ் பிரேமச்சந்திரன் மீது பல்வெறு குற்றச்சாட்டகளையும் சுமத்தியிருந்தார்.


No comments

Powered by Blogger.