கொரேனாத் தடுப்பு ஊசி ஆராய்ச்சியைக் கைவிட்ட பிரான்ஸ்!!
பிரான்சின் பிரபல மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமான பஸ்தர் நிறுவனம் (Institut Pasteu) தட்டம்மை (rougeole) நோய்க்கான தடுப்பு ஊசிகளின் அடிப்படையில் கொரோனத் தடுப்பு ஊசி ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டு வந்திருந்தனர்.
இது வெற்றியளித்தால் பிரான்சிற்கான தடுப்பு ஊசிகளை அவர்களே தயாரிக்கும் திட்டமும் உருவாக்கப்பட்டது.
ஆனால் தாங்கள் தயாரித்த தடுப்பு ஊசியின் ஆராய்ச்சிப் பெறுபேறுகள் திருப்பதியளிக்காமையால், இந்தத் தடுப்பு ஊசி ஆராய்ச்சியைத் தாங்கள் நிறுத்துவதாக பஸ்தர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வேறு விதமான ஆராய்ச்சிகளைத் தாம் புதிதாக ஆரம்பிக்க உள்ளதாகவும் பிரான்சின் பஸ்தர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
No comments