Boulogne-Billancourt : அதிரடிப்படையினர் மேற்கொண்ட தீவிர தேடுதல் வேட்டை!!
Boulogne-Billancourt நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை அதிரடிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
மாலை 4 மணிக்கு Boulogne-Billancourt (Hauts-de-Seine) நகரில் உள்ள rue Silly வீதியில் இந்த தேடுதல் வேட்டை இடம்பெற்றது. ஆயுயதாரி ஒருவன் அங்கு வசிக்கும் மூவர் கொண்ட குடும்பம் ஒன்றை கடத்தி வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு RAiD அதிரடிப்படையினர் மற்றும் அப்பகுதி காவல்துறையினர் குவிந்தனர்.
ஒரு மணிநேரத்துக்கும் மேலாக தேடுதல் வேட்டை இடம்பெற்றது. அதன் முடிவில் எவரும் கைது செய்யப்படவில்லை.
பின்னர் இந்த கடத்தல் சம்பவம் உண்மையில்லை எனவும், இது ஒரு போலியான தகவல் எனவும் தெரிவிக்கப்பட்டது.
No comments