Header Ads

இங்கிலாந்தில் கடுமையாக்கப்படும் கட்டுப்பாடுகள்! பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை

 


இங்கிலாந்தில் தற்போது அதிக வீரியம் மிக்க புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது.

அதனால் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நாடு முழுவதும் சில வாரங்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளன.

இது தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் பேசிய பிரதமர் போரிஸ் ஜான்சன் வைரஸ் பாதிப்பு மிகவும் குறைவாக உள்ள பகுதிகளில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதுபற்றி அவர் பள்ளிகள் பாதுகாப்பானவை, இளைஞர்கள் குழந்தைகளுக்கு அச்சுறுத்தல் மிகவும் சிறியது.

ஊழியர்களுக்கு ஏற்படும் ஆபத்து மிகக்குறைவு. கல்வியின் நன்மைகள் மிகப்பெரியவை என தெரிவித்துள்ளார்.

அதேசமயம் வரும் வாரங்களில் நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படலாம் என்று எச்சரித்துள்ளனர்.

இதுபற்றி அவர் கூறுகையில் அடுத்த சில வாரங்களில் நாம் கடினமான காரியங்களை செய்ய வேண்டி இருக்கலாம் நான் அதனுடன் முழுமையாக சமரசம் செய்கிறேன்.
முழு நாடும் அதனுடன் முழுமையாக சமரசம் செய்து கொண்டிருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.

பலவிதமான கடுமையான நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டிய சூழ்நிலை வரலாம் என கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.