Header Ads

இரண்டு ஆண்களைக் கொன்று சமைத்த இளம்பெண் பொலிசாருக்கு கொடுத்த அதிர்ச்சி

 


பிரித்தானியாவில் உள்ள Cheshire பகுதியில் இருந்து பொலிசாருக்கு Katie Jones (30) என்ற பெண் அழைத்து தன்னிடம் துப்பாக்கி ஒன்று இருப்பதாக கூறியுள்ளார்.

சிறிது நேரத்திற்குப் பின் மீண்டும் பொலிசாரை அழைத்த Katie, தான் ஒருவரை கத்தியால் குத்திவிட்டதாக உடனே வருமாறு தெரிவித்துள்ளார்.

அதன்பின் உடனே அந்த வீட்டுக்கு பொலிசார் விரைந்தனர் கதவைத் திறக்க மறுத்த Katie, உள்ளே நுழைந்தால் தன் கைகளை அறுத்துக்கொள்வேன் என பொலிசாரை மிரட்டியுள்ளார்.

பின்னர் கதவில் தன் தலையை முட்டிக்கொண்ட Katie, தன் வீட்டில் இருந்த இரண்டு ஆண்களைக் கொன்று அடுப்பில் சமைத்துக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

அவரிடம் பேச்சுவார்த்தை நடத்த முயன்ற பொலிசாரிடம், உன்னை துண்டு துண்டாக வெட்டிக் கொன்று புதைத்துவிடுவேன் என மிரட்டிய Katie, தனக்கு சிகரெட் வேண்டும் என மீண்டும் கேட்டுள்ளார் அவரது பேச்சில் நிதானம் இல்லாததை உணர்ந்தனர்.

சுமார் மூன்றரை மணி நேர பேச்சுவார்த்தைக்குப்பின், Katieயின் கையில் ஒரு உலோக ஆயுதம் இருப்பதாக தெரிந்தது.

ஷாக் கொடுக்கும் டேஸர்களுடன் உள்ளே நுழைந்த பொலிசார், அவரது கையில் இருந்தது கத்தி அல்ல ஒரு கரண்டி என்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இரண்டு பேரைக் கொன்று சமைத்துவிட்டேன் என அந்த பெண் கூறினாரே என வீட்டிலுள்ள அறைகளுக்குள் நுழைந்த பொலிசார், அங்கே இரண்டு ஆண்கள் தூங்கிக்கொண்டிருப்பதைக் கண்டுள்ளனர்.

உண்மையில், மூன்றரை மணி நேரம் நடந்த எதுவும் தெரியாமலே அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்திருக்கிறார்கள் கண்ட பொலிஸார் கடும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

பொலிசாரின் நேரத்தையும், மக்களின் வரிப்பணம் 1,002 பவுண்டுகளையும் வீணாக்கியதற்காக Katie கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.

இந்நிலையில், அவருக்கு மன நல பிரச்சினைகள் இருப்பது தெரியவந்துள்ளது.

அவருக்கு 300 பவுண்டுகள் மட்டும் அபராதம் விதித்த நீதிமன்றம், 12 மாதங்கள் சமூக சேவை செய்ய Katieக்கு உத்தரவிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.