Header Ads

பைசர் தடுப்பூசியை போட மறுக்கும் பிரித்தானியர்கள்….



 பிரித்தானியாவில் கொரோனா தொற்றுக்கு எதிரான பைசர் தடுப்பூசி கண்டுப்பிடிக்கப்பட்டு தற்போது மக்களிடையே செலுத்தப்படுகின்றது.

இந்நிலையில் தங்களுக்கு பைசர் தடுப்பூசி வேண்டாம் என வயதான பிரித்தானியர்கள் அடம்பிடிக்கிறார்கள.

அதற்கான காரணம், பைசர் தடுப்பூசி வெளிநாட்டு தயாரிப்பு என தெரிவித்துள்ளனர்.

எங்களுக்கு எங்கள் நாட்டு மருந்து கிடைத்தால்தான் தடுப்பூசி போட்டுக்கொள்வோம், ஆங்கில தடுப்பூசி தயாராகும்வரை காத்திருக்கத் தயார் என்று கூறியுள்ளனர். ப

குறிப்பாக, வட கிழக்கு பிரித்தானியாவிலுள்ள பிரித்தானியர்கள் மருத்துவர்கள் கொடுத்த அப்பாயிண்ட்மெண்டை மறுத்து, தடுப்பூசி போடாமல் தவிர்த்திருக்கிறார்கள்.

-78C வெப்பநிலையில் வைக்கப்படும் பைசர் தடுப்பூசியை ஒரு முறை அறை வெப்பநிலைக்கு கொண்டுவந்துவிட்டால், அதை உடனே பயன்படுத்திவிடவேண்டும், இல்லையென்றால் அது வீணாகிவிடும்.

ஆகவே, இந்த பிரித்தானியர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளாததால், அவர்களுக்கு போடப்பட வேண்டிய தடுப்பூசி வீணாவதை தவிர்க்க, அதை பொலிஸ் அதிகாரிகளுக்கு போட்டுள்ளார்கள்.

அதனால் பிரித்தானியர்களிடையே பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.