உள்ளிருப்பு - இந்த வாரம் எந்த அறிவிப்பும் இல்லை - இழுத்தடிக்கும் மக்ரோன்!!
கொரோனா வைரசின் தாக்கம் பிரான்சினை மிகவும் மோசமாகத் தாக்கி வருகின்றது. VOC 202012/01 எனப்படும் பிரித்தானியக் கொலைக் கொரோனா வைரசின் தாக்கம் பிரான்சை மிகக் கடுமையாகக் கவ்விக்கொள்ள ஆரம்பித்துள்ளது.
கிட்டத்தட்ட 30.000 கொரொனாத் தொற்று நோயாளிகளும் 3.000 இனைத் தாண்டிய உயிர் ஆபத்தான நிலையில் உள்ள தீவிரசிகிச்சை நோயாளிகளும் வைத்தியசாலைகளை நிரப்ப ஆரம்பித்துள்ளன.
மருத்துவத் துறையினர் களைத்து சோர்வடைந்த நிலையில் உள்ளனர்.
பிரான்சின் சுகாதார அமைச்சர், நிலைமை மோசமடைவதால், உடனடியான உள்ளிருப்பு அவசரம் எனத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தயாரக உள்ளது. உள்ளிருப்பு உடனடி அவசியம் எனப் பிரதமரும் தெரிவித்துள்ளார்.
விஞ்ஞான ஆலோசனைக் குழுவினர் நிலைமையின் பேராபத்தை வெளிச்சம் போட்டுக் காட்டி உள்ளனர்.
இந்த வாரம், அதுவும் புதன்கிழமை ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் அடுத்த கட்ட உள்ளிருப்பு நோக்கிய அறிவிப்புகளை வழங்குவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், இந்த வாரம் எந்த அறிவிப்புகளும் அறிவிக்கப்பட மாட்டாது என எமானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கால் வைரஸ் தொற்று கட்டுக்குள் வருகின்றதா எனப் பார்க்க இன்னும் அவகாசம் தேவை என ஜனாதிபதி மேலும் காலத்தை இழுத்தடிக்க முயல்கின்றார்.
கொரோனா வைரஸ் ஊரடங்கிற்குக் கட்டுப்படுமா? என்பதே எமானுவல் மக்ரோனின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதற்கு வைரசின் பதில் என்னவென்பது விரைவில் உணர்த்தப்படும்.
No comments