445 பேர் உயிரிழப்பு ! தீவிரசிகிச்சைப்பிரிவில் 3000 பேர் !!
இன்று திங்கட்கிழமை வெளியாகியுள்ள சுகாதாரத்துறையின் அறிக்கையில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டுள்ள நிலையில், வரும் புதன்கிழமையன்று இடம்பெற இருக்கின்ற உயர்மட்ட ஆலோசனைக்குழு கூட்டத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த 24 மணி நேரத்தில் 445 பேர் மருத்துவமனைகளில் உயிரிழந்துள்ளதோடு, புதிதாக 1 768 பேர் மருத்துவனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிர சிகிச்சபைப் பிரிவில் 3000 பேராக எண்ணிக்கை உயர்ந்துள்ளது. 26 964 பேர் மொத்தமாக மருத்துமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்றைய சுகாதார அறிக்கையின் புள்ளிவிபரங்களில் ஒப்பீட்டளவில் கடந்த வாரத்தினை விட அதிகரித்து காணப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது பொதுமுடக்கம் வருவதற்கான சாத்தியக்கூறுகளை காண்பிக்கின்றது என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
No comments