Header Ads

ஜேர்மனியில் மேலும் அதிகரிக்கும் கொரோனா! மீண்டும் கடுமையாக்கப்படும் கட்டுப்பாடுகள்



 ஜேர்மனியில் கடந்த 24 மணிநேரத்தில் 1,244 பேர் உயிரிழந்துள்ளதாக நாட்டின் நோய் கட்டுப்பாடு மையமான RKI அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

மேலும் அதிகமான இளைஞர்கள் தொற்றுநோய்க்கு உள்ளாகியுள்ளனர்.

ஐ.சி.யூ-வில் உள்ள நோயாளிகளின் சராசரி வயது 60-க்கும் குறைவாக உள்ளது என RKI நிலைமை குறித்து விவரித்துள்ளது.

வெளிபுறங்களில் மக்களை சந்திக்கும் போது சமூக இடைவெளி விட்டு முகக் கவசம் அணிய வேண்டும்

மேலும் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்

புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பெரும் ஆபத்தை விளைவிக்கின்றது.

85% மேற்பட்ட ஐசியூ படுக்கையில் நிரம்பியுள்ளன, சாதாரண படுக்கையும் வேகமாக நிரம்பி வருகின்றன.

கொரோனா தடுப்பூசி போட வாய்ப்பு கிடைத்தால் தயவு செய்து கண்டிப்பாக போட்டுக் கொள்ளுங்கள் என RKI வலியுறுத்தியுள்ளது.

சோதனையில் கொரோனா இல்லை என உறுதியானவர்கள் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டிய அவசியமில்லை என்ற அர்த்தமல்ல.

அவர்களும் கண்டிப்பாக கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.