Header Ads

11 மாதக் குழந்தையின் தொண்டையில் சிக்கி இருந்த பொருள்! எச்சரிக்கும் மருத்துவர்கள்

 


பிரித்தானியாவில் Swindonஇல் வாழும் Sofia-Grace Hill 11 மாதக் குழந்தையால் திரவ உணவை மட்டுமே உண்ண முடிந்துள்ளது.

நான்கு மாதங்களுக்கு பின் Sofiaவின் தந்தை, அவளை மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றுள்ளார்.

அவளுக்கு தொண்டை அழற்சி அல்லது வைரஸ் தொற்று ஏதாவது இருக்கலாம் என்று எக்ஸ்ரே எடுத்தபோதுதான், Sofiaவுக்கு இருந்த பிரச்சினைக்கான காரணம் தெரியவந்தது.

Sofiaவின் தொண்டையில் பேட்டரி ஒன்று சிக்கியிருப்பதை எக்ஸ்ரே காட்டியது.

பொம்மை கார்களுக்கு பயன்படுத்தப்படும் வட்டவடிவ பேட்டரி தொண்டையில் சிக்கியுள்ளது.

நான்கு மாதங்களாக அது குழந்தையின் தொண்டைக்குள் இருந்ததால், அந்த பேட்டரி துருப்பிடிக்க பிரச்சினை அதிகமாகிவிட்டது.

அந்த பேட்டரியில் உள்ள ரசாயனங்களால் Sofiaவின் தொண்டை அரித்துவிட்டது.

ஆகவே, அவளால் திட உணவு உண்ண முடியாது. அந்த புண் ஆறுவதற்காகவும், தொண்டை சுருங்கி மூச்சு விட முடியாத நிலை ஏற்படுவதை தடுக்கவும், அவளது தொண்டையில் குழாய் ஒன்றை பொருத்தியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பழைய பேட்டரி என்பதால் அதில் சார்ஜ் இல்லாததால்தான் Sofia உயிர் பிழைத்தாள் என்கிறார்கள் மருத்துவர்கள்.

Sofia மெதுவாக உடல் நலம் முன்னேறி வரும் நிலையில், குழந்தைகளுக்கு பேட்டரி பொருத்திய பொம்மை கார்களை விளையாடக் கொடுப்பது குறித்து Sofiaவின் தந்தையான Calham Hill எச்சரிக்கை விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.