துப்பாக்கிச்சூடு! - இளைஞன் சாவு, மேலும் இருவர் படுகாயம்!!
Nîmes நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு ஒன்றில் 18 வயதுடைய இளைஞன் ஒருவன் கொல்லப்பட்டுள்ளான்.
நேற்று திங்கட்கிழமை மாலை Mas de Mingue (Nîmes) பகுதியில் இடம்பெற்றுள்ளது. மாலை 7 மணி அளவில் avenue Monseigneur Claverie. வீதியில் துப்பாக்கிச்சூடு பதிவானதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதில் 18 வயதுடைய இளைஞன் சம்பவ இடத்திலேயே சாவடைந்துள்ளான். மேலும் இருவர் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
ஆயுததாரிகள் மகிழுந்து ஒன்றில் வந்திருந்ததாகவும், பின்னர் அந்த மகிழுந்து எரியூட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை.
Nîmes நகரில் அடிக்கடி துப்பாக்கிச்சூடுகள் பதிவாகி வருகின்றது. இவ்வருடத்தில் இடம்பெறும் மூன்றாவது துப்பாக்கிச்சூடு இதுவாகும்.
No comments