Header Ads

🔴 கொரோனா தடுப்பூசிகள்! - தற்போதைய நிலவரம்!!

 


கடந்த 24 மணிநேரத்தில் போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

அதனபடி, ஞாயிற்றுக்கிழமை 20.000 இற்கும் குறைவானவர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்ட நிலையில், நேற்று திங்கட்கிழமை கணிசமானோருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 66.087 பேருக்கு நேற்றைய நாளில் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

மொத்தமாக பிரான்சில் 1.092.958 பேருக்கு இதுவரை தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இது நேற்று ஜனவரி 25, மாலை 7.30 மணி வரையான நிலவரமே.

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் 449 பேர் மருத்துவமனையில் சாவடைந்துள்ள நிலையில், புதிதாக  4,240  பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அண்மையில் பதிவான மிக குறைவான தொற்று இதுவாகும். 


No comments

Powered by Blogger.