Header Ads

மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியுடன் உரையாற்றிய இம்மானுவல் மக்ரோன்!!

 


ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 24) மாலை தொலைபேசி வாயிலாக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோ பைடனுடன் உரையாற்றியுள்ளார். 

 
இந்த தொலைபேசி உரையாடலில் கொவிட் 19 தொற்று, பரிஸ் ஒப்பந்தம் மற்றும் மத்திய கிழக்கு சர்ச்சைகள் தொடர்பாக இருவரும் உரையாற்றியுள்ளனர். இத்தகவலை எலிசே மாளிகை வெளியிட்டுள்ளது. <<பரிஸ் ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைந்துகொள்ள வேண்டும்!>> இம்மானுவல் மக்ரோன் தொலைபேசி வயிலாக ஜோ பைடனுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மக்ரோன் ஜோ பைடனுடன் உரையாற்றுவது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதும் நவம்பர் 10 ஆம் திகதி  இருவரும் தொலைபேசி வழியாக உரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.