🔴 அடுத்தக்கட்ட உள்ளிருப்பு?? - இவ்வாரத்தில் அறிவிக்க உள்ள ஜனாதிபதி..!!
அடுத்த கட்ட உள்ளிருப்பு தொடர்பாக இவ்வாரத்தில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இவ்வார வார நடுப்பகுதியில் (புதன்கிழமை அளவில்) மக்ரோன் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. நாளை செவ்வாய்க்கிழமை Conseil de défense sanitaire சந்திப்பு இடம்பெற உள்ளது. இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு, அதன் தொடர்ச்சியாக நாளை மறுநாள் இந்த அறிவிப்பை இம்மானுவல் மக்ரோன் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
மக்ரோனின் அறிவிப்பில்,
கொவிட் 19 வைரஸ்,
அதன் பிரித்தானிய வகை வைரஸ்,
தடுப்பூசிகளின் தாமதம்,
மூன்றாம் கட்ட உள்ளிருப்பு
போன்ற முக்கிய தகவல்களை ஜனாதிபதி வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
No comments