Header Ads

பிரான்சில் உறுமாறும் கொரோனா வைரசின் பேராபத்து - பிரான்சின் விஞ்ஞான ஆலோசனைக் குழுத் தலைவர்!!

 


கொரோனாத் தொற்றுத் தடுப்பிற்காக, ஜனாதிபதிக்கு ஆலோசனை தெரிவிக்கும் விஞ்ஞான ஆலோசனைக் குழுவின் தலைவர் Jean-François Delfraissy, தற்போது பிரான்சில் உள்ள பேராபத்தை உணர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

 
 
«உரு மாறும் ஒவ்வொரு புதிய கொரோனா வைரசும், தங்களின் தரவுகளையும் புரத அலகுகளையும் மாற்றிக் கொண்டே உள்ளது» 

«புதிய உருமாறிய பிரித்தானிய வைரஸ், தென்னாபிரிக்க வைரஸ், பெரும் அச்சுறுத்தலிற்கு உள்ளாக்கும் பிரேசில் வைரஸ், புதியதாக உருமாறியிருக்கும் கலிபோர்னிய வைரஸ் என, உலகம் மிகவும் புத்திசாலியான வைரசின் இரண்டாம் பெருந்தொற்றிற்கு உள்ளாகி உள்ளது»

«அரசாங்கமும் சுகதாரத்துறை அமைச்சரும், இந்தக் கோடை காலத்திற்குள் பிரான்சில் அனைவரிற்கும் தடுப்பு ஊசிகள் போட்டுவிடலாம் எனத் தெரிவித்துள்ளனர். ஆனால் தொடர்ந்து நிலவ இருக்கும் கொரோனாத் தடுப்பு ஊசிகளின் தட்டுப்பாடு, அரசாங்கம் தெரிவித்திருக்கும் இந்தக் கால எல்லையில் வெறும் 40% போரிற்கு மட்டுமே தடுப்பு ஊசி மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியும்»
 
 எனவும் விஞ்ஞான ஆலோசனைக் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.