கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் பலருக்கு கொரோனா!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணியாற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
விமான நிலைய மற்றும் விமான சேவை தலைவர் ஜீ.ஏ.சந்திரசிறி இதனை தெரிவித்துள்ளார்.
ஜாஎல பிரதேசத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அவர்கள் தங்கள் பிரதேசத்திலேயே கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
இந்த பாதுகாப்பு அதிகாரிகள் தங்கள் வீடுகளில் பாதுகாப்பு அதிகாரிகளின் கண்கானிப்பின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதுவரையில் அந்த பாதுகாப்பு அதிகாரிகளுடன் நெருங்கி செயற்பட்ட மேலும் சில விமான நிலைய அதிகாரிகள் PCR பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் 140 பேருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments