Header Ads

திங்கட்கிழமையில் இருந்து புதிய பயணச்சட்டம் - கட்டாயக் கொரோனப் பரிசோதனை!!

 


பிரித்தானிய வைரஸ் (VOC-202012/01) மிகக் கடுமையாகப் பிரான்சில் பரவி வருவதாகப் பிரான்சின் சுகாதார அமைச்சர் ஒலிவியே வெரோன் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் சனிக்கிழமையிலிருந்து பிரான்ஸ் தன்னை 18h00 மணியிலிருந்து அதிகாலை 6h00 மணிவரை ஊரடங்கிற்குள் உள்ளாக்கி உள்ளது.

 
அதே நேரம் பல பயணக்கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே உள்ள நாடுகளில் இருந்து பிரான்சிற்குள் வருபவரகள்;, கட்டாயமாக 72 மணித்தியாலத்திற்கு உட்பட்ட கொரோனாப் பரிசோதனைப் பெறுபேறுகளை வைத்திருத்தல் அவசியம். இதில் கொரோனாப் பரிசோதனையில் மறைப் பெறுபேற்றினை (test négatif) வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
 
கடல் வழியாகவோ, வான் வழியாகவோ வருபவர்கள் கட்டாயம் இதனை சமர்ப்பிக்க வேண்டும்.
 
சுவிற்சர்லாந்தும், நோர்வேயும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லாத நாடுகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
ஒவ்வொரு நாளும், 200 இலிருந்து, 300 வரையான பிரித்தானியக் கொரொனாத் தொற்றானது பிரான்சில் பரவி வருவதாகச் சுகாதார அமைச்சர் எச்சரித்துள்ளார

No comments

Powered by Blogger.