🔴 அவதானம் : பிரான்சுக்கு வந்த போலி கொரோனா தடுப்பு மருந்து..!!
கொரோனா வைரசுக்கு போலியான மருந்துகள் சந்தைக்கு வந்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த போலி மருந்துகள் இணையத்தளமூடாக விற்கப்படுவதாகவும், இது தொடர்பான விசாரணைகளை சர்வதேச புலனாய்வுத்துறை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மருந்துகள் பிரான்சில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 200 யூரோக்கள் முதல் 1.000 வரை விற்பனை செய்யப்படுவதாகவும், இவ்வகை மருந்துகள் அனைத்தும் போலியானவை எனவும், எக்காரணங்கள் கொண்டும் அவற்றை வாங்க வேண்டாம் எனவும் பிரெஞ்சு அரசு தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
No comments