கொரோனா தடுப்பூசி தொடர்பில் மகிழ்ச்சியான தகவலை வெளியிட்ட பிரான்ஸ்
பிரான்ஸில் தற்போது ஃபைஸர்- பயோன்டெக் நிறுவனத்தின் தடுப்பு ஊசிகள் போடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக ஊசிகள் போடப்பட்ட 500 பேரின் தகவல்கள் ANSM (Agence nationale de sécurité du médicament et des produits de santé) நிறுவனத்தினால் ஆய்விற்கும், தொடர்ச்சியான கண்காணிப்பிற்கும் உட்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரான்ஸில் இதுவரை போடப்பட்டுள்ள கொரோனாத் தடுப்பு ஊசிகளால் எந்த பக்கவிளைவுகளும் இதுவரை பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ANSM வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாங்கள் கொரோனாத் தடுப்பு ஊசிகளின் ஆரம்பப் பகுயில் இருக்கின்றோம்.
முன்னதாக ஃபைஸர்- பயோன்டெக் நிறுவனத்தின் தடுப்பு ஊசிகளை போட்டுக்கொண்ட அமெரிக்கா, இஸ்ரேல், பிரித்தானியா ஆகிய நாடுகளை சேர்ந்த பிரஜைகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆனால் பிரான்ஸில் அவ்வாறான பிரச்சனை ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments