Header Ads

கனடா பயணிப்போருக்கு அறிமுகப்படுத்தப்படும் புதிய கொரோனா விதிமுறைகள்

 


வேறு நாடுகளிலிருந்து கனடா திரும்புவோருக்காக ஜனவரி 7ஆம் திகதி முதல் புதிய விதிமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ஐந்து வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள், கனடா புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்குள் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில், தங்களுக்கு கொரோனா இல்லை என மின்னணு ஆவணம் ஒன்றின் மூலம் உறுதிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு பயணிகள் சமர்ப்பித்தால் மட்டுமே கனடா செல்லும் விமானத்தில் ஏற அவர்கள் அனுமதி பெறுவார்கள்.

அத்துடன், அந்த சோதனை பி.சி.ஆர் முறையில் (PCR) செய்யப்பட்டதாக மட்டுமே இருக்கவேண்டும்.

மேலும் கொரோனா இல்லை என உறுதிபடுத்தப்பட்ட போதிலும் கனடா வந்ததும் அவர்கள் 14 நாட்களுக்கு தங்களை கட்டாயம் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும்.

விதிகளை மீறுவோருக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனையும், 750,000 டொலர்கள் வரை அபராதமும் விதிக்கப்படும் என்றும் புதிய விதிமுறை கூறுகிறது.

இந்நிலையில், இதுவரை போக்குவரத்து துறை இந்த புதிய விதிமுறை பயணிகளுக்கு கடும் குழப்பத்தையும் சலிப்பையும் ஏற்படுத்தும் என தேசிய விமான சேவை கவுன்சிலின் தலைவரான Mike McNaney தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.