ஐரோப்பாவிற்குள் பயணம் செய்ய தடுப்பு ஊசிக் கடவுச்சீட்டு - நிராகரித்த பிரான்ஸ்
ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளின் ஜனாதிபதிகளும், அரசப் பிரதிநிதிகளும் இன்று காணொளி மூலமான மாநாட்டை நடாத்தியுள்ளனர்.
இதில் முக்கியமாகக் கொரோனத் தடுப்பூசிக் கடவுச் சீட்டின் (passeport vaccinal) அவசியம் விவாதிக்கப்பட்டுள்ளது.
கட்டாயமாக ஐரோப்பாவிற்குள் பயணம் செய்பவர்களிற்கு 'தடுப்பூசிக் கடவுச் சீட்டு அவசியம்' என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஏற்கனவே கிறீஸ், ஸ்பெயின், மால்டா, போத்துக்கல், டென்மார்க் போன்றவை, கொரோனாத் தடுப்பூசிக் கடவுச் சீட்டுக்களை விநியோகம் செய்துள்ளனர்.
ஆனால், இது கொரோனாத் தடுப்பு ஊசிகளின் ஆரம்பக் காலம் மட்டுமே. இப்படியான விவாதங்களிற்கு இது சமயமல்ல. இது பற்றி சில மாதங்களின் பின்னர் மீண்டும் ஆலோசிக்கலாம் என, பிரான்ஸ் இந்தத் திட்டத்தினை நிராகரித்து உள்ளது.
பிரான்சுடன் இணைந்து ஜேர்மனி பிரித்தானியா போன்றவையும் நிராகரித்துள்ளன.
எஸ்தோனியா பின்லாந்து போன்றவை இலத்திரனியல் கொரோனாத் தடுப்பு ஊசி அத்தாட்சிப் பத்திரங்களை வழங்க அரம்பித்துள்ளனர்.
பிரான்ஸ் முதற்கட்ட ஊசிகளைக் கூட இன்னமும் ஒரு மில்லியன் பேர்களிற்குக் கூடப் போடவில்லை. இந்த மாத இறுதியிலேயே இந்த ஒரு மில்லியன் எல்லை எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் பிரான்சிற்கு கொரோனத் தடுப்பூசிக் கடவுச் சீட்டு என்பது சாத்தியமானதல்ல!!
No comments