Header Ads

பிரான்ஸில் நிகழ்ந்த கொடூரம்! நிர்வாணமாக துரத்தப்பட்ட பெண்!

 


இளம் பெண் ஒருவர் நிர்வாணப்படுத்தி, வீதியில் துரத்தப்பட்டுள்ளார். Rochetaillée (Saint-Etienne) நகரில் இச்சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. 19 வயதுடைய இளம் பெண் ஒருவர் கடத்தப்பட்டு வன்முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். பின்னர் அவர் நிர்வாணப்படுத்தப்பட்டு வீதியில் துரத்தப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் காவல்துறுறையினரை அழைத்து தகவல் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தில் தொடர்புபட்ட ஒருவர் மறுநாள் திங்கட்கிழமை Isère, Vienne நகரில் வைத்து கைது செய்யப்பட்டார்.கைதான நபர் திருடப்பட்ட மகிழுந்து ஒன்றில் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது சந்தேக நபரும் கைது செய்யப்பட்டு, இருவரும் நேற்று புதன்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுதப்பட்டனர். மேலதிக விசாரணைகளை காவல்துறையினரை மேற்கொள்ளுமாறு நீதிமன்றத்தால் பணிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.