Header Ads

பிரான்சில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய எல்லை கட்டுப்பாடுகள்



 பிரித்தானியர்கள் உட்பட ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் அல்லாத நாட்டு மக்களுக்கு, புதிய பிரான்ஸ் எல்லைக் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தவுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் அல்லாத நாடுகளிலிருந்து பிரான்ஸ் வருவோர் அனைவரும், பயணிப்பதற்கு 72 மணி நேரத்திற்குள் செய்த கொரோனா பரிசோதனையில் தங்களுக்கு கொரோனா இல்லை என உறுதிப்படுத்தினால் மட்டுமே நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என பிரான்ஸ் பிரதமர் Jean Castex தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்கள் பிரான்ஸ் வந்ததும் ஏழு நாட்களுக்கு தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதாக எழுத்து மூலம் தெரிவிக்க வேண்டும்.

இரண்டாவது முறையாக பி.சி.ஆர் முறையில் கொரோனா சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை முதல் (ஜனவரி 18), ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் அல்லாத நாடுகளிலிருந்து பிரான்ஸ் வருவோர் அனைவரும், புறப்படுவதற்கு 72 மணிநேரத்திற்குள் கொரோனா பரிசோதனை செய்து கொண்டிருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

எல்லையின் சில பகுதிகளில் தீவிரவாத தாக்குதல்கள் மற்றும் சட்ட விரோத புலம்பெயர்தலை தடுப்பதற்காகவும் இந்த எல்லைக்கட்டுப்பாடுகள் எடுக்கப்படுவதாக பிரான்ஸ் அதிகாரிகள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.