Header Ads

தடுப்பூசியை முதலில் ஊடகவியலாளர்களுக்கும் குத்தவும்

 


கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் தடுப்பூசியை முதலில் வழங்கவுள்ள குழுக்களுள் ஊடகவியலாளர்களையும் உள்வாங்குமாறு கோரிக்கை விடுத்துள்ள மிளகு, சோளம், கராம்பு உள்ளிட்ட சிறு ஏற்றுமதி பயிர்கள் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்பர, ஆபத்தான நிலையில் நின்றுகொண்டே அவர்கள் கடமையாற்றுகின்றனர் என்றார்.

எம்பிலிப்பிட்டிய நகரில்  (24) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

'சுகாதாரத்துறை, முப்படையினர், உள்ளூராட்சி நிறுவன ஊழியர்களைப் போல, ஊடகவியலாளர்களும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில், மக்களிடத்தில் தகவல்களைக் கொண்டு சேர்க்கும் மிகச் சிரமமான பணியில் ஈடுபட்டுள்ளனர்' என்றார்.

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் வசிக்கும் பிரதேசங்கள், அவர்களின் பி.சி.ஆர் பரிசோதனைகள் மாத்திரமின்றி மரணமடையும் தொற்றாளர்களின் இறுதிக்கிரியைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலான செய்திகளை ஊடகவியலாளர்களே மக்களிடத்தில் கொண்டு செல்கின்றனர் என்றார்.

கொரோனா வைரஸ் தடுப்பூசி யாருக்கு வழங்கப்படவுள்ளது என்பதை ஊடகங்கள் வாயிலாக தெரிந்துகொண்டேன். எனவே, இந்தக் குழுவில் ஊடகவியலாளர்களையும் இணைத்துக்கொள்ளுமாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். யுத்தக் காலத்தில் களத்திலிருந்து மக்களுக்குத் தகவல்களை வழங்குவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஊடகவியலாளர்கள், கொரோனா காலத்திலும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர் என்றார். 


No comments

Powered by Blogger.