Header Ads

மது மோகத்தால் அமெரிக்க இராணுவ வீரர்களுக்கு நேர்ந்த கதி

 


அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள இராணுவ தளத்திலிருந்து 11 இராணுவ வீரர்கள் மது என நினைத்து Antifreeze திரவத்தை குடித்து தீவிர உடல்நலக் கோளாறு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

அவர்கள் நேற்று மது என நினைத்து தவறாக ஒரு திரவத்தை குடித்ததையடுத்து, அவர்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

அவர்கள் குடித்த திரவமாது அது antifreeze என அழைக்கப்படும் ethylene glycol எனும் இரசாயனம் எனது தெரியவந்தது.

எத்திலீன் கிளைகோல் பொதுவாக உறைநிலையைக் குறைக்க நீரில் சேர்க்கப்படும் திரவமாகும்.

இது அதிகமாக மோட்டார் வாகனத்தின் ரேடியேட்டரில் பயன்படுத்தப்படுகிறது.

இதனை உட்கொள்வது கடுமையான சிறுநீரக பாதிப்பு மற்றும் மரணத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.