சீனாவில் மீண்டும் தீவிரமடையும் கொரோனா அவசர நிலை பிரகடனம்!
சீனாவில் கொரோனா தொற்றின் தாக்கம் முற்றாக குறைவடைந்த நிலையில் மீண்டும் அதனட இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில் தொற்றுப் பரவல் தீவிரமடைந்ததையடுத்து சீனாவின் ஹைலோங்ஜியாங் மாகாணத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மிகவும் அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே குடிமக்கள் வெளியே செல்ல வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் பெரும்பாலானோருக்கு அறிகுறியில்லாத தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனால், கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளநிலையில் அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
No comments