Header Ads

ஜேர்மனியில் பைசர் தடுப்பூசி பெற்ற 10 பேர் பலி! பரபரப்பு தகவல்

 


உலகில் கொரோனா தொற்றை முடிவிற்கு கொண்டு வருவதற்காக பைசர் தடுப்பூசி கண்டுப்பிடிக்கப்பட்டு பயன்படுத்தப்படும் வருகின்றது.

இந்நிலையில் பைசர் தடுப்பூசி பெற்றிவர்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாக பல செய்திகள் வந்துகொண்டிருக்கின்றது.

ஜேர்மனியில், பைசர் தடுப்பூசி போட்டு நான்கு நாட்களுக்குள் 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பைசர் தடுப்பூசியை இணைந்து தயாரித்த ஜேர்மனியிலேயே 10 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டபின் பலியாகியுள்ளனர்.

தடுப்பூசி போட்டுக்கொண்டு பல மணி நேரம் முதல் நான்கு நாட்கள் வரையிலான காலகட்டத்திற்குள், 79 முதல் 93 வயது வரையுள்ள 10 பேர் பலியாகியுள்ளார்கள்.

ஆகவே, ஜேர்மனியின் Paul Ehrlich நிறுவனத்தைச் சேர்ந்த நிபுணர்கள் இந்த உயிரிழப்புகள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

No comments

Powered by Blogger.