கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களின் நிலை தொடர்பில் எச்சரிக்கும் நிபுணர்
கொரோனா தொற்றால் மனிதர்களின் நுரையீரல் அதிகமாக பாதிக்கப்படுகின்றது.
நுரையீரல் எக்ஸ்ரேயைப் பொருத்தவரை, அதில் எந்த அளவுக்கு நுரையீரல் கருப்பாக தெரிகிறதோ, அந்த அளவுக்கு ஒருவரது நுரையீரல் ஆரோக்கியமாக உள்ளத.
அதாவது, குறித்த நபரால் அந்த அளவுக்கு ஆக்சிஜனை உள்ளிழுக்க முடியும்.
புகை பிடிப்பவரின் எக்ஸ்ரேயைப் பார்த்தால் அதில் கருப்பு நிறம் குறைவாக இருப்பதைக் காண கூடியதாக உள்ளது.
அதே நேரத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவரின் எக்ஸ்ரே, கிட்டத்தட்ட வெள்ளையாகவே காணப்படுகின்றது.
ஆகவே, கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களின் நுரையீரலின் நிலைமை, புகை பிடிப்பவர்களின் நுரையீரலின் நிலைமையை விட மிக மோசமாக உள்ளது.
பொதுவாக மக்கள் கொரோனாவால் உயிரிழப்பவர்களை விட, கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களின் நிலைமை படு பயங்கரமாக இருக்கிறது என்கிறார் Dr Brittany.
அத்துடன், இந்த நிலைமை நீண்ட காலத்திற்கு நீடிக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
No comments