Header Ads

எதிர்பையும் மீறி தன்னிச்சையாக ஊரடங்கு அறிவிப்பு!!

 


அந்தப் பகுதி பாராளுமற்ற உறுப்பினர்கள் மற்றும் பலரின் எதிர்பையும் மீறி, மார்செய்யினை தலைமை நகரமாகக் கொண்ட  Bouches-du-Rhône இன் மாவட்டங்களிற்கு 18h00 மணியிலிருந்தான ஊரடங்கு உத்தரவை மாவட்ட ஆணையாளர் (préfet) அறிவித்துள்ளார். இது  PACA எனப்படும் Provence-Alpes-Côte d'Azur மாகாணத்தின் பகுதியாகும்.



அரசாங்கம் இன்னமும் இந்தப் பகுதிகளிற்கு, 18h00 மணியிலிருந்தான ஊரடங்கு உத்தரவை அறிவிக்கவில்லை.

இருப்பினும், இங்கு 21 பேரிற்கு பிரித்தானிய வைரசின் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், இன்னமும் இவர்களுடன் தொடர்பில் இருந்த பலரிற்கும் இந்தப் பிரித்தானிய கொரோனா வைரசின் தொற்றுப் பரவி இருக்கலாம் என்றும், இது மிகவும் வேகமாக எங்கும் பலவலாம் என்றும், இது பாரிய ஆபத்து என்றும் மாவட்ட ஆணையாளர் அச்சம் தெரிவித்துள்ளார்.

இதனால் தான் இந்த ஊரடங்கு உத்தரவை அறிவித்து உள்ளதாக  Bouches-du-Rhône மாவட்டங்களின் ஆணையாளர் Christophe Mirmand தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.