Header Ads

சிதறி கிடக்கும் இந்தோனேசிய விமானம்! பயணிகளின் நிலை என்ன..?

 


இந்தோனேசியாவில் Jakarta-விலிருந்து 50-க்கும் மேற்பட்டவர்களுடன் Pontianak புறப்பட்ட Sriwijaya Air flight SJ182 போயிங் விமானம், விமான போக்குவரத்து அதிகாரிகளுடனான தொடர்பை இழந்து ரேடாரிலிருந்து மாயமானது.

விமானத்தில் 46 பெரியவர்கள், ஏழு குழந்தைகள், மூன்று கைக்குழந்தைகள் மற்றும் ஆறு குழு உறுப்பினர்கள் இருந்ததாக போக்குவரத்து அமைச்சகம் தகவல் தெரவித்துள்ளது.

இதனையடுத்து,இந்தோனேசியா அவசர மற்றும் மீட்பு பணியினர் கப்பல் தேடுதல் பணியை தொடங்கினர்.

கடலில் விமானத்தின் பாகங்கள் மிந்தது கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, இந்தோனேசிய கடற்படையின் டைவர்ஸ் குழு கடலுக்கு அடியில் தேடும் பணியை தொடங்கியது.

இந்தோனேசிய கடற்படையின் Kopaska டைவர்ஸ் குழுவின் மேஜர் Edi Tirtayasa கூறியதாவது, Jakarta-வின் seribu தீவு கடல்பகுதிக்கு அடியில் Sriwijaya Air flight SJ182 விமானம் துண்டு துண்டுகளாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விமானம் முழுவதும் சேதமடைந்துள்ளது. விமான டயர்கள், மின் பாகங்கள், விமானத்தின் முக்கியமான நீல-சிவப்பு பாகங்கள், முன் பாகம் மற்றும் பிற பாகங்கள் கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டன.

கண்டெடுக்கப்பட்ட விமானத்தின் பாகங்கள் இந்தோனேசியா கடற்படைக்கு சொந்தமான KRI Kurau கப்பல் மூலம் கொண்டு செல்லப்பட்டன என Edi Tirtayasa தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.