Header Ads

கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்ட இங்கிலாந்து ராணி மற்றும் அவரது கணவர்



உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 94 வயதான பிரித்தானிய மகாராணி எலிசபெத் மற்றும் 99 வயதான அவரது கணவர் ஃபிலிப் ஆகியோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்த தகவலை பக்கிங்காம் அரண்மனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்து ராணியின் விண்ட்சர் மாளிகையில் வைத்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்த தகவலை உடனே வெளியிட இங்கிலாந்து ராணி உத்தரவிட்டதாகவும் அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

No comments

Powered by Blogger.