அடுத்த வாரத்தில் மூன்றாம் உள்ளிருப்பு ??? - பிரதமரின் அறிவித்தல்!!
அதியுச்சக் கொரொனத் தொற்று, பிரித்தானிய, தென்னாபிரிக்க, பிரேசில் வைரஸ்களின் அதியுச்சப் பரவலை பிரான்சில் தடுப்பதற்காக, அதன் பரவல் வேகத்திற்குத் தடை விதிப்பதற்காக, பிரான்சின் அரசாங்கம் மூன்றாவது உள்ளிருப்பை அறிவிப்பதாக முடிவெடுப்பது பற்றிய முடிவுகளை பிரதர் ஜோன் கஸ்தெக்ஸ்இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் மூன்றாவது உள்ளிருப்பை அறிவிப்பதாக முடிவு செய்தால், அது, அடுத்த வாரத்தில் பாராளுமன்றத்திலும், அதனைத் தொடர்ந்து செனட் சபையிலும் விவாதிக்கப்பட்டு, வாக்கெடுப்பு நடாத்தப்படும் எனப் பிரதர் ஜோன் கஸ்தெக்ஸ் இன்று தெரிவித்துள்ளார்.
இந்தத் தீர்மானங்கள் தொடர்பாக இன்று, தொழிற்சங்கங்கள், நிறுவன முதலாளிகளின் பிரதிநிதிகள் போன்றவர்களுடன் கொரோனாத் தடுப்பு தொடர்பாக இன்று பிரதமர் கலந்தாலோசித்தமையும் குறிப்பிடத்தக்கது.
அரசாங்கம் பொருளாதாரத்தை மட்டும் கருத்திற்கொண்டு, மிகவும் மெதுவாகவே கொரேனாத் தடுப்பு நடவடிக்கையில் கவனம் செலுத்துகின்றது.
No comments