இல்-து-பிரான்சில் கொரோனாத் தடுப்பு ஊசிகள் இல்லை…..!!!
பிரான்சினைத் தொடர்ச்சியாக கொரேனாத் தடுப்பு ஊசிகளின் விநியோகம் அச்சுறுத்தி வருகின்றது பிரான்ஸ் கொள்வனவு செய்த ஆணைகள் வழங்கிய கொரோனாத் தடுப்பு ஊசிகளிற்கான விநியோகம் பெரும் தாமதம் அடைந்து வருகின்றது இதனால் பல தடுப்பு ஊசி மையங்கள் நிறுத்தப்பட்டதுடன் ஏற்கனவே பதிவு செய்தவர்களிற்கான தடுப்பு ஊசிகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
இல்-து-பிரான்சில் எதிர்வரும் 2ம் திகதி பெப்ரவரி மாதத்தில் இருந்து ஏற்கனவே முதல் அலகு தடுப்பு ஊசி போட்டவர்களிற்கான இரண்டாவது அலகு ஊசிகள் மட்டுமே போடப்படும் எனவும் புதிதாக யாரிற்கும் தடுப்பு ஊசிகள் மறு அறிவித்தல் வரை போடப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
75 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருந்தலும் ஆபத்தான நோய்கள் உள்ளவர்களானலும் சரி முதல் அலகு ஊசிகள் போடப்படமாட்டாது என்ற தகவலை இல்-து-பிரான்சின் பிராந்திய சுகாதார நிறுவனமான ARS அறிவித்துள்ளது.
No comments