கடந்த 24 மணிநேரத்தில் 348 சாவுகள் !! 23.370 தொற்று!!!
அரசாங்கம் உள்ளிருப்பு அறிவிப்பை தள்ளிப் போட்டுக் கொண்டு இருக்கும் நிலையில், பிரான்சில் கொரோனாத் தொற்றும், கொரோனாச் சாவுகளும் உச்சத்தை நோக்கிச் சென்று, நாளிற்கு நாள், மிகவும் ஆபத்தாகவும் மோசமாகவும் சென்று கொண்டு இருக்கின்றது.
கடந்த 24 மணி நேரத்திற்குள் 23.370 பேரிற்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பிரான்சில் கொரோனத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.130.629 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்திற்குள் 348 பேர் சாடைந்துள்ளனர். இதனால் மொத்தச் சாவுகள் 74.804 ஆக உயர்ந்துள்ளது.
27.128 கொரோனத் தொற்று நோயாளிகள் தற்சமயம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைவடையாமல் அதிகரித்த வண்ணமே உள்ளன.
3.101 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர். நாளிற்கு நாள் இது அதிகரித்தே செல்கின்றது.
No comments