பிரித்தானிய மக்களுக்கு அறிவிக்கப்படும் புதிய திட்டம்!
பல புதிய வகை கொரோனா வைரஸ்கள் உலகம் முழுவதும் உருமாறத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், பிரித்தானியாவுக்கு வரும் சில பயணிகள் ஹோட்டல்களில் தனிமைப்படுத்த வேண்டியிருக்கும்.
இதற்கு பிரித்தானிய அரசாங்கம் புதிய திட்டத்தை அறிவிக்கவுள்ளது.
அதாவது பிரித்தானியாவில் உள்ள அனைத்து ஹோட்டல்களையும் தனிமைப்படுத்துவதற்கான இடங்களாக மாற்றும் புதிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தை அமுல்படுத்துவது குறித்த பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று அறிவிக்கவுள்ளார்.
இதனால், பிரித்தானிய மக்கள் யாரும் தங்கள் விடுமுறைகளுக்காக ஹோட்டல் அறைகளை முன்பதிவு செய்யவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இன்று இரவுக்குள் இந்த hotel quarantine திட்டம் குறித்து முடிவெடுக்கப்பட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என பிரித்தானிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
No comments