Header Ads

வடமாகாண மக்களுக்கு சுகாதார பணிப்பாளர் விடுத்துள்ள முக்கிய செய்தி!

 


எதிர்வரும் பெப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்திலிருந்து வடக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசி பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கல் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் அரசாங்க அதிபர் க.மகேசன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று இடம்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

நாளை ஆறு இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கவுள்ளன. முதற்கட்டமாக சுகாதார உத்தியோகத்தர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. இரண்டாம் கட்டமாக பாதுகாப்புப் பிரிவினருக்கு வழங்கப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து எதிர்வரும் பெப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்திலிருந்து ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக் குட்பட்ட பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளது எனத் தெரிவித்தார்.

மேலும் குறித்த தடுப்பூசியினை மிகவும் குறுகிய காலத்திற்குள் பொதுமக்களுக்கு வழங்கி முடிப்பதன் மூலம் யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்று அச்ச நிலைமையை நீக்க முடியும் எனவும் எனவே ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பிரதேச செயலர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் உதவியுடன் பொதுமக்களின் தகவல்களை சேகரித்து அவர்களுக்குரிய தடுப்பூசியினை வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.