Header Ads

பிரித்தானிய வகை கொரோனா மிக மோசமாக பரவுவதற்கான காரணம் …?

 


பிரித்தானியாவில் உருமாறிய புதிய வகை கொரோனா மிக வேகமாக தொற்றக்கூடியதன் காரணம் தெரியவந்துள்ளது.

திடீர் மாற்றம் பெற்ற பிரித்தானிய வகை கொரோனா, சாதாரண கொரோனாவை விட 70 சதவிகிதம் மோசமாக தொற்றக்கூடியது.

அது மனிதனின் தொண்டையிலேயே வேகமாக இனப்பெருக்கம் செய்வதனால் மிக வேகமாக தொற்றக்கூடிய ஆற்றல் கொண்டுள்ளது என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்து சுகாதாரத்துறையும், பர்மிங்காம் பல்கலைக்கழகமும் மேற்கொண்ட ஆய்வில் திடீர் மாற்றம் பெற்ற கொரோனா நோயாளிகளின் மூக்கு மற்றும் தொண்டையிலிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் சாதாரண கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் மாதிரிகளில் இருந்ததைவிட மிக அதிக அளவில் கொரோனா வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளது.

ஆய்வின் தலைவரான Michael Kidd தெரிவிக்கையில் இந்த ஆய்வின் முடிவுகள், இந்த புதிய வைரஸ் தான் பாதித்த ஒவ்வொருவர் உடலிலும் எப்படி பரவுகிறது என்பதை கண்டுபிடிக்க உதவியுள்ளது.

இந்த ஆய்வு மேலும் மற்ற ஆய்வுகளுடன் ஒப்பிடப்படவேண்டியுள்ளது.

மேலும் மாதிரிகளில் காணப்படும் அதிக அளவிலான வைரஸ், பாதிக்கப்பட்டுள்ளவர்களின் தொற்றின் தீவிரத்திற்கும், வைரஸின் பரவும் திறனுக்கும் காரணமாக உள்ளது என கருதலாம் என தெரிவித்துள்ளார்

No comments

Powered by Blogger.