மீண்டும் சரிவை சந்தித்த இலங்கை ரூபா!
அமெரிக்க டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (22) மேலும் சரிந்தது.
அமெரிக்க டொலரின் விற்பனை விலை 199.18 ரூபாயாகவும், கொள்வனவு விலை 194.31 ரூபாயாகவும் இருந்தது.
முந்தைய இரண்டு சந்தர்ப்பங்களில், டொலருக்கு எதிராக இலங்கை ரூபாய் 199 ரூபாயாக சரிந்தது.
கடந்த ஆண்டு ஏப்ரல் 6 ஆம் திகதி 199.40 ஆகவும், ஏப்ரல் 8 ஆம் திகதி 200.46 ஆகவும் சரிந்தது.
இதேவேளை கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 198.26 ரூபாவாக பதிவாகியமை குறிப்பிடத்தக்கது.
No comments