கொரோனத் தடுப்பு ஊசி போட்டவர்கள் 9 பேர் சாவு - தொடர்பில்லை என்கின்றது அரசு!!
Pfizer/BioNTech கொரோனத் தடுப்பு ஊசியின் முதல் அலகு ஊசிகளைப் போட்டுக் கொண்ட ஒன்பது வயதானவர்கள் சாவடைந்துள்ளார்கள்.
இவர்களின் சாவுகளிற்கும் கொரோனத் தடுப்பு ஊசிகளிற்கும் எந்நதவித் சம்பந்தமும் இல்லை இல்லை என மருந்துகளிற்கான தேசிய நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள தரவுகளின்படி, இவர்களின் சாவுகளிற்கும் கொரோனத் தடுப்பு ஊசிகளிற்கும், எந்நதத் தொடர்புகளும் உறுதிப்படுத்தப்படவில்லை என, மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்களிற்கான தேசியப் பாதுகாப்பு நிறுவனமான ANSM (Agence nationale de sécurité du médicament et des produits de santé) தெரிவித்துள்ளது.
இவர்கள் ஒன்பது பேரும் வயது முதிர்ந்தவர்கள் என்றும், மற்றவர்களின் உதவியுடன் தங்கி வாழும் முதியோர் இல்லங்களான EHPAD (établissement d’hébergement pour personnes âgées dépendantes) என்றும், பல தீவிர நோய்களிற்காகச் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தவர்கள் எனவும் ANSM தெரிவித்துள்ளது.
இதுவரை தடுப்பு ஊசிகள் போடப்பட்டுள்ள 823.000 பேரில், இதுவரை 135 பக்கவிளைவுகள் மட்டுமே பதிவாகி உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments