இலங்கையில் அரங்கேறிய கொடூரம்! கூரிய ஆயுதத்தால் கொல்லப்பட்ட இளைஞர்!
இலங்கையில் மீட்டியாகொட எரிபொருள் நிரப்பு நிலையத்தின் அருகில் 25 ஆம் திகதி நேற்று இரவு கூரிய ஆயுதத்தால் ஒருவரை கொலை செய்யதுள்ளனர்.
மீட்டியாகொடகமயை வசிப்பிடமாகக் கொண்ட 26 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட நபரின் கையொன்று துண்டாக்கப்பட்டுள்ளது.
குறித்த கையின் பகுதி மீட்டியாகொட நாற்சந்தியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இக்கொலை தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் மீட்டியாகொட காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துச் செல்கின்றனர்.
No comments