Header Ads

சுவிட்சர்லாந்தில் அறிமுகப்படுத்தப்படும் உமிழ்நீரிலிருந்து கொரோனா கண்டறியும் பரிசோதனை



சுவிட்சர்லாந்திலிருந்து புறப்படும் பயணிகள் உமிழ்நீரிலிருந்து கொரோனா பரிசோதனை செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது நடைமுறையிலிருக்கும் பி.சி.ஆர் சோதனை முடிவுகள் பெற 24 மணி நேரம் ஆகும்.

இந்நிலையில் இந்த உமிழ்நீரிலிருந்து செய்யப்படும் சோதனை முடிவுகள் சுமார் ஐந்து மணி நேரத்துக்குள்ளேயே தயாராகிவிடும்.

அத்துடன், இந்த சோதனையை செய்ய மருத்துவ துறை ஊழியர்கள் தேவையில்லை.

பயணிகளே தாங்களாகவே செய்துகொள்ளலாம் இந்த பரிசோதனை கிட்டின் விலை 195 சுவிஸ் ஃப்ராங்குகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் மாதிரியை சேகரித்ததும், அவை அருகிலுள்ள ஆய்வகம் ஒன்றிற்கு அனுப்பப்படும்.

ஒரு நாளைக்கு நான்கு முறை மாதிரிகளை ஆய்வகத்திற்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பரிசோதனை செய்தவர்களுக்கு, பரிசோதனை முடிவுகள் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.

தினமும், காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பரிசோதனைகள் செய்யப்படும். 5 மணிக்கு மேல் சேகரிக்கப்படும் மாதிரிகளின் முடிவுகள் மறுநாள் தயாராகும்.

இந்த பரிசோதனை, பயணம் செய்பவர்களுக்கு, குறிப்பாக விமான பயணிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனை அவசியம் என்பதால், பெரிதும் உதவியாக இருக்கும். 

No comments

Powered by Blogger.