நெருக்கடியில் இருக்கும் லண்டன் மருத்துவமனைகள்! அமுல்படுத்தப்பட்ட அவசரநிலை பிரகடனம்
பிரித்தானியா தலைநகர் லண்டனில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்கு மத்தியில் நகர மேயர் சாதிக் கான், அவசரநிலை பிரகடனப்படுத்தினார்.
தற்போது அவசரநிலை பிரகடனம் அமுல்படுத்தப்பட்டதற்கான பின்னணி தரவுகள் வெளியாகியுள்ளது.
லண்டனில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஏற்கனவே நெருக்கடியில் இருக்கும் மருத்துவமனைகளுக்கு இது பெரும் ஆபத்தை ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
லண்டனில் உள்ள 21 NHS அறக்கட்டளைகளில் 16 பாதுகாப்பு வரம்பை மீறியுள்ளன.
NHS Improvement, 92%-க்கும் அதிகமான படுக்கை வசதிகள் பாதுகாப்பற்றதாக இருப்பதாகவும் மருத்துவமனைகளின் செயல்திறனைக் குறைப்பதாகவும் கூறுகிறது.
பிரதமர் போரிஸ் ஜான்சனின் தொகுதியான ஆக்ஸ்பிரிட்ஜில் உள்ள ஹில்லிங்டன் மருத்துவமனைகள் NHS அறக்கட்டளை மற்றும் வடக்கு லண்டனில் உள்ள விட்டிங்டன் ஹெல்த் NHS அறக்கட்டளை ஆகியவையில் ஜனவரி 5 ஆம் திகதி நிலவரப்படி 100% படுக்கை வசதிகள் நிரம்பியுள்ளன.
இந்த் நெருக்கடியான நிலையை தவிர்ப்பதற்காக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
No comments