14 வயது சிறுமியிடம் ஆபாசமான வீடியோவை பெற்ற இளைஞன்!
அமெரிக்காவில் Bo Jack Kelley (27)என்ற இளைஞன் இணையதளம் மூலம் 14 வயது சிறுமியிடம் நட்பாகியுள்ளான்.
தனக்கு 19 வயது என பொய் கூறி Bo Jack Kelley அவரிடம் கவர்ந்து பேசி ஆபாசமான வீடியோக்களை கேட்டு பெற்றுள்ளான்.
பின்னர் மேலும் நிறைய வீடியோக்களை அனுப்பவில்லை என்றால் தன்னிடம் இருக்கும் வீடியோவை உன் தாய்க்கு அனுப்பிவிடுவேன் என சிறுமியை மிரட்டியுள்ளான்.
சிறுமி மேலும் வீடியோ அனுப்பாததால் சிறுமியின் தாய்க்கு பேஸ்புக் மூலம் வீடியோவை அனுப்ப அதை பார்த்த அவர் அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து உடனடியாக அவர் காவல்துறையில் புகாரளித்த பின்னர் பொலிசார் Bo Jack Kelley-ஐ கைது செய்தார்கள்.
விசாரணையில் இதே போல இன்னொரு சிறுமியை வீடியோவை வைத்து அவர் மிரட்டியது தெரியவந்தது.
இதை தொடர்ந்து நீதிமன்றத்தில் Bo Jack Kelley மீதான வழக்கு நடந்து வந்த நிலையில் அவருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
No comments