Header Ads

ஊடகங்களின் பார்வையில் நாளை பிரான்சின் சுகாதார அமைச்சர் ஒலிவியே வெரொன்



 நாளை வியாழக்கிழமை பிரான்சின் சுகாதார அமைச்சர் ஒலிவியே வெரொன் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு ஒன்றை மேற்கொள்வார் என, பிரெஞ்சு அரசாங்கத்தின் பேவல்லவாரான கப்ரியல் அத்தால் இன்று தெரிவித்துள்ளார்.

 
பிரான்சில் உள்ள தீவிரமான கொரோனாத் தொற்று தொடர்பான ஒரு களநிலை அறிக்கையினை ஒலிவியே வெரோன் வழங்குவார் என்றும், இந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில், பிரான்சின் சுகாதாரப் பிரிவின் தலைமை இயக்குநர் ஜெரோம் சொலமொன் மற்றும் பிரெஞ்சு அரசிற்கான விஞ்ஞான ஆலோசனைக் குழுவினரும் கலந்து கொண்டு, ஊடகவியலாளர்கள் கேள்விகளிற்குப் பதிலளிப்பார்கள் எனவும், கப்ரியல் அத்தால் தெரிவித்துள்ளார்.
 
அதே நேரம், கப்பரியல் அத்தாலிடம், எங்களின் கேள்விகளிற்கு, பிரதமர் ஜோன் கஸ்தெக்ஸ் மற்றும் ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் எப்போது பதிலளிப்பார்கள் என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். அதற்கான கால அட்டவனை எதுவும் இன்னமும் தனக்க அறிவிக்கப்படவில்லை என, கப்ரியல் அத்தால் பதிளலளித்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.