Header Ads

மூன்றாவது உள்ளிருப்பு 99 சதவீதம் உறுதி - எமானுவல் மக்ரோன்

 


மூன்றாவது உள்ளிருப்புக் கட்டுப்பாட்டை அறிவிப்பது என்பது 99 சதவீதம் உறுதியான நிலையில் அதனை எமானுவல் மக்ரோன் எப்பொழுது அறிவிப்பார் என்பது மட்டுமே கேள்விக்குறியாக உள்ளது.

 
அது இந்த வார இறுதியோ அல்லது திங்கட்கிழமையாகவோ இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.  நாளை அல்லது ஓரிரு தினங்களில் மீண்டும் பாதுகாப்புச் சபையைக் கூட்ட உள்ள எமானுவல் மக்ரோன், அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
 
மிகவும் இறுக்கமான, கடுமையான கட்டுப்பாடுகளுடனான ஒரு உள்ளிருப்பு என்பதே இன்று எட்டப்பட்ட தீர்மானம் என்றும் இது இரகசியமாகப் பேணப்படுகின்றது என்றும், பேசவல்லவரின் அறிக்கையில் விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருந்துள்ளது.
 
எமானுவல் மக்ரோன் சில நாட்களை வெல்வதற்காகக் காத்திருந்தாலும் சுகாதார நிலைமை அவரிற்கு அந்த அவகாசத்தை அளிக்கும் நிலையில் இல்லை.
 
«நாம் ஒரு கிழமை தான் தாமதிக்க முடியும். அனால் பிரெஞ்சு மக்களிற்கான பதிலை நாம் சொல்லியே ஆகவேண்டும். ஊரடங்கு கொரோனாத் தொற்றை நிறுத்துவதற்கான பலனை வழங்கியிருக்கவில்லை. நாம் அடுத்த முடிவை அறிவிக்கவேண்டும்» என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 
பிரான்ஸ் கடுமையான உள்ளிருப்பிற்குள் செல்வது நிச்சயமான ஒன்றாக உள்ளது.

No comments

Powered by Blogger.