Header Ads

அபாய கட்டத்தில் லண்டன்…. திணறும் சுகாதாரத்துறை!



 பிரித்தானியா தலை நகர் லண்டனில் கொரோனா பெரும் நெருக்கடிகை ஏற்படுத்தியுள்ளது.

அதனால் சுகாதாரத்துறைக்கு உதவும் வகையில் ஆம்புலன்ஸ் ஓட்ட காவல்துறை அதிகாரிகளை வழங்குவதாக பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது.

கொரோனாவால் லண்டன் முழுவதும் உள்ள சுகாதார சேவை ஊழியர்கள் பெரும் தாக்கத்தை எதிர் நோக்குகின்றனர் என துணை உதவி ஆணையர் Matt Twist கூறியுள்ளார்.

காவல்துறையினரின் நெஞ்சங்களில் உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் மக்களை பாதுகாப்பாக வைப்பதற்கும் உந்துதல் உள்ளது

லண்டன் ஆம்புலன்ஸ் சேவைக்கு ஆதரிக்க முன்வந்த அதிகாரிகள் பெருமையுடனும், உயர்ந்த தொழில்முறையுடனும் செய்வார்கள்.

மிகவும் சவாலான சில சம்பவங்களில் நகரம் முழுவதும் எங்கள் சுகாதார சேவை சகாக்களுக்கு ஆதரவளித்த நீண்ட வரலாற்றை லண்டன் பெருநகர காவல்துறை கொண்டுள்ளது.

தலைநகர் முழுவதும் ஆம்புலன்ஸை ஓட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 75 அதிகாரிகளை பெருநகர காவல்துறை வழங்கும் என துணை உதவி ஆணையர் Matt Twist தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.