Header Ads

பிரித்தானியாவில் கொரோனாவின் உச்சம்! வெளியான முக்கிய தகவல்

 


பிரித்தானியாவில் நாடளாவில் ஊரடங்கு அமுலில் இருந்த நிலையிலும் 36 பகுதிகளில் கொரோனா பரவல் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது.

குறிப்பிட்ட 36 பகுதிகளில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள 10 பகுதிகள் தொடர்பில் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதில், மெர்செசைடில் உள்ள நோவ்ஸ்லி பகுதியானது நாட்டின் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டுமின்றி, Barking and Dagenham, Newham மறும் Slough ஆகிய பகுதிகளும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்ட 315 பகுதிகளில், அதிக கொரோனா பரவல் உறுதி செய்யப்பட்டவை வெறும் 36 என தெரிய வந்துள்ளது.

இரண்டு வார கால தேசிய ஊரடங்கால் எஞ்சிய 279 பகுதிகளில் கொரோனா பரவல் குறைந்தளவில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள 10 பகுதிகள்: Norwich,Preston,Mansfield,South Ribble,Plymouth,Torbay,Redditch,Malvern Hills, Chesterfield,Chorley

இப்பகுதி மக்கள் அனைவருக்கு மேலும் கடுமையான கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.