🔴 கொரோனா : சாவு எண்ணிக்கை அதிகரிப்பு! - இன்றைய நிலவரம்! (ஜனவரி 18)
கொரோனா வைரஸ் காரணமாக இன்று திங்கட்கிழமை பதிவான தொற்று மற்றும் சாவு விபரங்கள் இதோ.
கடந்த 24 மணிநேரத்தில் 404 பேர் மருத்துவமனையில் சாவடைந்துள்ளனர். கடந்த சில நாட்களோடு ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை அதிகமாகும். நேற்று ஞாயிற்றுக்கிழமை 141 பேர் மருத்துவமனையில் சாவடைந்திருந்தனர்.
தற்போது 25,584 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்றோடு ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 1,666 பேரால் அதிகமாகும்.
2803 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமையை விட 254 பேர் அதிகமாக இன்று அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
No comments