Header Ads

அரசின் தீர்மானத்துக்கு எதிராக தகவல் வெளியிட்ட சுகாதார துறை..!!



அரசால் பரிந்துரை செய்யப்பட்ட முகக்கவசங்களை மாத்திரமே அணிய வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சுகாதார துறை அதற்கு எதிராக புதிய அறிவித்தலை வெளியிட்டுள்ளது. 

 
அண்மையில் சுகாதார அமைச்சர்  

Olivier Véran தெரிவிக்கும் போது, பொதுமக்கள் தரமற்ற முகக்கவசங்களை அணிவதை நிறுத்த வேண்டும் எனவும், அரசு பரிந்துரை செய்த முகக்கவசங்களை அணிய வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். 

 
இந்நிலையில் பிரெஞ்சு மருத்து நிறுவனமாகிய l'Académie de médecine வெளியிட்ட தகவலின் படி, <<துணியினால் தைக்கப்பட்ட முகக்கவசங்கள் மிகவும் பாதுகாப்பானவை எனவும், கொரோனாவிடம் இருந்து அது உங்களை பாதுகாக்கின்றது!>> எனவும் அறிவித்துள்ளது. 
 
குறிப்பாக, பிரித்தானியாவில் இருந்து பரவியுள்ள புதியவகை கொரோனாவிடம் இருந்தும் இந்த துணியினால முகக்கவசங்கள் பாதுகாப்பளிக்கின்றது எனவும் அறிவித்துள்ளது. 
 
60 வயதுக்குட்பட்ட, வேறு உடல் உபாதைகள் இல்லாத அனைவரும் இந்த முகக்கவசங்களை அணியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

No comments

Powered by Blogger.